அவிநாசி,செப்.30: ஆயுதபூஜையை முன்னிட்டு அவிநாசி வட்டார பகுதியில் உள்ள கடைகளில் அலங்கார பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு வந்துள்ளன. தொழில் மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள், கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சுத்தப்படுத்தியும், அலங்கரித்தும் வழிபாடு நடத்தப்படும். பூஜையின் போது, வாகனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில், வண்ண காகிதங்கள், பூ வேலைப்பாடு செய்த மின்னும் வகையிலான அலங்கார வடிவங்கள், செயற்கை பூக்கள் கொண்ட தோரணங்கள், மாலைகள் கொண்டு அலங்காரம் செய்வது வழக்கம். அவிநாசி வட்டாரப்பகுதியில் உள்ள கடைகளில் அலங்கார பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதனை பொதுமக்கள். தொழில் நிறுவனத்தினர், வியாபார நிறுவனத்தினர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
+
Advertisement