Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பூர் முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர், அக்.29: திருப்பூர் முருகன் கோயில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விழாவானது கடந்த 22ம் தேதி தொடங்கியது. அன்றைய நாள் முதல் விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு அணிந்து தங்களது விரதத்தை தொடர்ந்தனர்.

எந்தவித ஆதாரமும் உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு காலை மற்றும் மாலை முருகன் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரபத்மனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நேற்று திருப்பூர் மாநகரில் உள்ள முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் அரசு கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவிலில்  வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.