திருப்பூர், அக்.28: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருப்பூர் மாவட்ட காலநிலை மாற்றம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது.
திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட மாவட்ட சுற்றுச்சூழல் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் மன்னர் திப்பு சுல்தான் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்றத்தின் செயலாளர் வீரபத்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.


