திருப்பூர், அக்.25: திருப்பூர், வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, கொங்கு மெயின் ரோடு ஜவகர் நகர் 5வது வீதியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரனையில் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த கணேசன் (47), சேது (63), முருகானந்தம் (58), மணிகண்டன் (50), ராஜ்குமார் (42), செந்தில்நாதன் (54), ரஜினிகாந்த் (44), வேலுசாமி (56), பழனிசாமி (76), என்பதும், அவர்கள் அப்பகுதியில் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. தொடர்ந்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூதாடிய 9 பேரை கைது செய்தனர். மேலும், சீட்டுக்கட்டுகள், ரூ.33.400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


