திருப்பூர், செப்.23: திருப்பூர் கல்லூரி சாலையில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்பன் கோவில் எதிரே முத்துசாமி வீதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில், முதலிபாளையத்தை சேர்ந்த கணேசன் (27) என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து லாரி மற்றும் சரக்கு வாகனத்தை நிறுவனம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது லாரி மற்றும் சரக்கு வாகனத்தில் இருந்த பேட்டரியை காணவில்லை. இதுகுறித்து கணேசன் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
+
Advertisement