திருப்பூர், செப்.23: திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அமராவதிபாளையம் மாட்டுச்சந்தைக்கு நேற்று 670 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் கன்றுகள் ரூ.3,000 முதல் ரூ.4,000 வரையிலும், மாடுகள் ரூ.32,000 முதல் ரூ.35,000 வரையிலும், எருமை ரூ.27,000 முதல் ரூ.30,000 வரையிலும், காளைகள் ரூ.29,000 முதல் ரூ.32,000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.நேற்று முதல் நவராத்திரி விழா தொடங்கியதன் காரணமாக விவசாயிகள் பலரும் தங்கள் காளை மற்றும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வரவில்லை.இதனால் கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவான அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.வரத்து குறைந்ததால் காளை மற்றும் மாடுகளின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சுமார் ரூ.500 முதல் ரூ.2500 வரை விலை அதிகமாக இருந்தது.
+
Advertisement