திருப்பூர்,ஆக.19: 15-வது ஊதிய ஒப்பந்தப்படி 20 மாத நிலுவைத்தொகையை வழங்கக்கோரி சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓய்வுபெற்ற நல அமைப்பு இணைந்து திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஓய்வு பெற்ற நல அமைப்பின் நிர்வாகி துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநில உதவி செயலாளர் கோபிகுமார், சிஐடியு மாவட்ட உதவி தலைவர் உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
+
Advertisement