அவிநாசி, அக். 12: விபத்தில்லா தமிழகமாக மாற்ற திருப்பூர் மாவட்ட காவல்துறை, அவிநாசி போக்குவரத்து காவல்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி அவிநாசியில் நேற்று நடைபெற்றது. புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியை, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ் அசோக் தொடங்கி வைத்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட்டை வழங்கி பேசினார். பேரணியில், மாவட்ட ஊர்காவல் படை மண்டல தளபதி மனோகரன், ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், டி.எஸ்.பி. சிவக்குமார், ஊர்காவல் படை துணை மண்டல தளபதி நித்யா, டாக்டர் மாதேஸ்வரி சதிஷ்குமார், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வனிதா உள்பட பலர் பங்கேற்றனர். பேரணியில், பெருமாநல்லூர் கே.எம்.சி. பொதுப்பள்ளி மாணவர்கள், பழனியப்பா பள்ளி மாணவர்கள் பங்கேற்று, ‘‘தலைக்கவசம் அது நம் வாழ்வின் உயிர் கவசம், சாலை விதிகளை மதிப்போம் விபத்தில்லா தேசம் படைப்போம்’’ என்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
+
Advertisement