திருப்பூர், டிச.9: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீதியில் வசிப்பவர்களுக்கு ஆலமரத்து அடியில் உள்ள ஒரே ஒரு ஆழ்குழாய் கிணறு மூலமாக மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், தனியார் சிலர் அப்பகுதியில் புதிதாக இடம் வாங்கி, மாநகராட்சியிடம் அனுமதி பெற்று ஏற்கனவே உள்ள பொது ஆழ்குழாய் கிணற்றிற்கு அருகில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்ததாக தெரிகிறது. இதனால், பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி, கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
+
Advertisement


