திருப்பூர், டிச. 9: திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெற்று பதிவேற்றும் செய்யும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்கிடையே திருப்பூர் சப்-கலெக்டா் சிவப்பிரகாஷ், எஸ்.வி. காலனி மற்றும் லட்சுமிநகா் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விடுபட்ட படிவங்களை விரைவாக பெற வேண்டும். இதுபோல், இறப்பு மற்றும் குடிபெயா்ந்த நபா்களின் விவரங்களை மொபைல் ஆப்பில் விரைவாக அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
+
Advertisement


