உடுமலை, ஆக. 5: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் வருவது பற்றி தக்க நேரத்தில் மலைவாழ் மக்கள் தகவல் தெரிவித்ததால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலின் மேற்பகுதியில் சுமார் 1 கிமீ தூரத்தில் மலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
இந்த கோயிலில் தரிசிக்கவும், பஞ்சலிங்க அருவியில் குளிக்கவும் உடுமலை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.