அவிநாசி, டிச. 3: அவிநாசி அருகே குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற தென்னங்கருப்பட்டி ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 1,500 கிலோ தென்னங்கருப்பட்டியை உற்பத்தியாளர்கள் ஏல மையத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
தென்னங்கருப்பட்டி கிலோ 135 ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2லட்சத்து 2 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. போதியஅளவு வரத்து இல்லாததால், நேற்று பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறவில்லை.
இந்த தகவலை, குன்னத்தூர் கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளன செயல் தலைவர் சந்திரசேகரன் மற்றும் மேலாளர் கோமதி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

