பாலக்காடு, டிச. 2: பாலக்காடு மாவட்டம், கொடும்பு அருகே மிதுனம்பள்ளம் அருகே இரண்டு பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்காடு மாவட்டம், சித்தூர் தெக்கேக்கிராமம் சாஸ்தா நகரை சேர்ந்த கண்ணதாசனின் மகன் ராகுல் (23). இவர், தனது பைக்கில் இவரது நண்பர்களான ஆதர்ஷ், அத்வைத் ஆகியோர் சித்தூரிலிருந்து பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர். அப்போது பாலக்காட்டில் இருந்து நல்லேப்பிள்ளிக்கு எதிராக வந்த வாலிபர்களின் பைக் கொடும்பு அருகே மிதுனம்பள்ளம் சாலை வளைவில் வந்த போது எதிரே வந்த பைக் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 5 வாலிபர்களையும் போலீசார் மீட்டு பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

