பாலக்காடு, டிச. 2: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அதிரப்பிள்ளி அருகே வெற்றிலப்பாறை பாலம் ஆற்றில் குளித்த சுற்றுலா பயணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
எர்ணாகுளம் மாவட்டம், போர்ட் கொச்சியை சேர்ந்தவர் சுதீர் (55). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சாலக்குடி அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்தார். இதையடுத்து காலடி பிளேன்டேஷன் 17 பிளாக் பாலம் அருகே ஆற்றில் நண்பர்களுடன் குளித்தார்.
அப்போது சுதீர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த, சகநண்பர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களுடன் சுதீரை தேடினர்.

