நெல்லை, அக். 31: நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நெல்லையில் இன்று(31ம் தேதி) மாலை நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அம்பை, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (31ம் தேதி) மாலை 5 மணிக்கு நெல்லையில் மாவட்ட அலுவலகம் கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி, நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் முதல்வர் தலைமையில் கடந்த 28ம்தேதி நடந்த ‘என் வாக்குச்சாவடி. வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டம் தொடர்பாகவும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement 
 
  
  
  
   
