தியாகராஜநகர், அக்.30: காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தலைமையாசிரியர் ஜான்சி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக வானவில் மன்ற பணியாளர் சுமதி கலந்து கொண்டார். கண்காட்சியில் தண்ணீரின் அடர்த்தியை கண்டறியும் எளிய செயல்முறை விளக்கம், ஊட்டசத்து காய்கறிகள், தானியங்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சத்து பானங்கள், உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் ஆங்கில மொழி, வரலாறு தொடர்பாக படங்கள், வெளிநாட்டு நாணயங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை அனைத்து மாணவ, மாணவிகளும் கண்டு களித்தனர். கண்காட்சியை பார்வையிட்ட ஆசிரியர் குழுவினர் வழங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கண்காட்சியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
+
Advertisement
