திருவேங்கடம், செப். 30: திருவேங்கடம் அருகே கரிசல்குளத்தில் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் விஜயசேகர் ஏற்பாட்டில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். பரிசளிப்பு விழாவுக்கு மருத்துவ அணி மாவட்டச் செயலாளர் டாக்டர் திலீபன்ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். குருவிகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். விழா நிகழ்ச்சிகளைகிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவராஜ் தொகுத்து வழங்கினார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் சிவஆனந்த், குருவிகுளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ராமதுரை, திருவேங்கடம் பேரூர் செயலாளர் செல்லப்பட்டி சுதாகர், கிளைச் செயலாளர்கள் சீனிவாசன், முருகன், கிருஷ்ணராஜ், முத்துராமலிங்கம், மணிகண்டன், குருசாமி, சுப்பிரமணியன், ஜெயராம், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement