நாசரேத், அக்.28: நாசரேத் அருகே உள்ள அகப்பைகுளம் தூய அந்திரேயா ஆலய 119வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நாசரேத், வாழையடி, அகப்பைகுளம், மாதாவனம், வகுத்தான்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூய அந்திரேயா ஆலய சேகர தலைவர் பாஸ்கரன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், ஆலய பரிபாலன கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் செய்திருந்தனர்.
+
Advertisement
