சங்கரன்கோவில்,செப்.27: சங்கரன்கோவில் நகராட்சி 8வது வார்டு லட்சுமியாபுரம் 3ம் தெருவில் புதிய குடிநீர் குழாய் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சேர்மன் கவுசல்யா தலைமை வகித்தார். கமிஷனர் சாம்கிங்ஸ்டன், பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய பொது குடிநீர் குழாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் பிரகாஷ், நகர அவைத்தலைவர் முப்புடாதி, முன்னாள் மாவட்ட வர்த்தக அணி பத்மநாபன், வார்டு செயலாளர்கள் மகாமாரியப்பன், நடராஜன், வைரவேல் சுப்பிரமணியன், செந்தில்குமார், வெங்கடேஷ், கவுன்சிலர்கள் புஷ்பம், செல்வராஜ், ராஜா ஆறுமுகம், பாக முகவர்கள் ராஜ், சபாபதி, அருணாச்சலம், ஜான்சன், சக்தி, ராமர் உள்பட பலர் கொண்டனர்.
+
Advertisement