தியாகராஜநகர்,நவ.26: தினகரன் நாளிதழ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வினா- விடை தொகுப்பு வெளியிடப்படுகிறது. அனுபவமிக்க ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வினா- விடை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளிவருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான வினா-விடை தொகுப்பினை தினகரன் அறிவொளி திட்டத்தின் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினரும் புரவலருமான பாண்டுரெங்கன் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்தார். வினா-விடை தொகுப்பினை தலைமையாசிரியர் ஜான்சி மாணவர்களுக்கு வழங்கினார். இந்த தொகுப்பு கடந்த திங்கள்கிழமை வெளியாகி உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை வினா-விடை தொகுப்பு வெளியாகும் என்பது குறிப்பிட்டத்தக்கது.
+
Advertisement


