கடையநல்லூர்,செப்.26: கடையநல்லூர் நகராட்சியில் தூய்மையே சேவை 2025 திட்டத்தின் கீழ் அண்ணாமலைநாதர் தெப்பக்குளத்தில் நடந்த தூய்மை பணிகளை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்து உறுதிமொழி ஏற்பு நடந்தது. கவுன்சிலர் யாசர்கான், சுகாதார அலுவலர் பிச்சையாபாஸ்கர், சுகாதார ஆய்வாளர்கள் சிவா, மாதவன்ராஜ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுகுமாரன், முருகானந்தம், பாதுஷா, ஹக்கீம் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பேசுகையில், ‘மீண்டும் இப்பகுதியில் குப்பை போடாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இந்த சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்படும். மரங்கள் நடவு செய்து பூங்காவாக மாற்றப்படும். தெருவிளக்கு ஏற்படுத்தப்படும்’ என்றார்.
+
Advertisement