சங்கரன்கோவில், செப்.26: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு, சங்கரன்கோவில் ஏவிகே பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான 16 வது தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் நடந்தது. இதில், சங்கரன்கோவில் ஏவிகே பள்ளி மாணவர்கள் பங்கேற்று தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். முன்னதாக சென்னையில் நடைபெற்ற 50வது மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தேர்வாகியிருந்தனர். இதைதொடர்ந்து நடைபெற்ற தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற சங்கரன்கோவில் ஏவிகே பள்ளி மாணவர்கள் பிரின்ஸ் தாமஸ் சப் யூத் பிரிவில் 375 புள்ளிகளும் அமுதன் 366 புள்ளிகளும் பெற்று தேசிய அளவிளான போட்டிக்கு தேர்வு பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர் சாய் மகேந்திரா ஏற்கனவே நடந்த போட்டிகளில் பங்கேற்று தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement