நெல்லை, செப்.26: தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலம் இடையன்குளம் சேகரம் வடக்கு எருக்கலைப்பட்டி சபை பரி. நல்லமேய்ப்பன் ஆலயம் 46வது பிரதிஷ்டைப் பண்டிகை இன்று (26ம்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. முதல்நாளான இன்று காலை 10 மணிக்கு லீதியாள் ஸ்டார்லின் தலைமையில் பெண்கள் பண்டிகை, மாலை 7.30 மணிக்கு இடையன்குளம் சேகரத்தலைவர் ஸ்டார்லின் தலைமையில் ஆயத்த ஆராதனை, ஓய்வு நாள் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் நாளான 27ம்தேதி காலை 9.30 மணிக்கு சேரன்மகாதேவி சேகரத்தலைவர் கிப்சன் ஜாண்தாஸ் தலைமையில் பரி. ஞானஸ்நான ஆராதனையும், மதியம் 2 மணிக்கு பண்டிகை ஆராதனை, பரி. திருவிருந்து ஆராதனை கல்லிடைக்குறிச்சி சேகரத்தலைவர் முத்துராஜ் தலைமையில் நடக்கிறது. மாலை 7.30 மணிக்கு கானாவூர் சுவி. ஜார்ஜ் ஞானராஜ் குழுவினரின் பஜனை நடக்கிறது. 3ம் நாளான 28ம்தேதி காலை 9 மணிக்கு பரி.திருவிருந்து ஆராதனை 11 மணிக்கு சேகர வாலிபர் கூடுகை, மாலை 3.30 மணிக்கு அசன ஐக்கிய விருந்து, இரவு 8 மணி செல்சன் குழுவினரின் நற்செய்தி கூட்டம் நடக்கிறது. அனைத்து ஆராதனைகளிலும் குடும்பமாக பங்கேற்க அழைக்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை இடையன்குளம் சேகரத்தலைவர் ஸ்டார்லின் தலைமையில் சபை ஊழியர் சாம்ராஜ் மற்றும் வடக்கு எருக்கலைப்பட்டி சபை மக்கள் செய்து வருகின்றனர்.
+
Advertisement