ஏரல், நவ. 25: ஏரல் அருகேயுள்ள திருவழுதிநாடார்விளை முன்னாள் திமுக வார்டு செயலாளர் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதுகுறித்து கேள்விப்பட்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கியுள்ளார். இந்த தொகையை ஏரல் பேரூர் செயலாளர் ராயப்பன், பிரான்சிஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அமைச்சர் சார்பில் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது திருவழுதிநாடார்விளை திமுக நிர்வாகிகள் ஜெயப்பாண்டியன், கார்த்தீசன், தாமஸ், லிங்ககுமார், ஜெகன் மற்றும் குகன் உள்பட பலர் உடனிருந்தனர்.
+
Advertisement



