வீரவநல்லூர்,அக்.25: பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சிராஜ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் மீராசா, அமைப்பு பொதுச் செயலாளர் மஜீத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொடர் மழையின் காரணமாக புறநகர் மாவட்டம் முழுவதும் சிதிலமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், புறநகர் மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடத்துவது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை நேரத்தை அதிகரிக்க அரசு கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் சுலைமான் நன்றி கூறினார்.
+
Advertisement
