திசையன்விளை, அக். 24: நெல்லை மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள், நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளம் ஏபிஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சண்முகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன் ரீகன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான். மேலும் மாவட்ட அளவிலான கலை இலக்கிய மன்ற போட்டிகள், நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 6, 7ம் வகுப்பு பிரிவில் ஆங்கில பேச்சுப் போட்டியில் 7ம் வகுப்பு மாணவன் ஹரிகர சுதன் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றான். வெற்றி பெற்ற இரு மாணவர்களையும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
+
Advertisement


