விகேபுரம், அக்.23: விகேபுரம் அருகே முன் விரோதம் காரணமாக கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விகேபுரம் அருகே திருப்பதியாபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் ரவிசங்கர் (43). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (19) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சக்திவல் தீபாவளி பண்டிகையன்று தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ரவிசங்கர் வீட்டின் முன்பு நிறுத்திய கார் கண்ணாடியை அரிவாளால் அடித்து நொறுக்கினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விகேபுரம் போலீசார் சக்திவேல், 2 சிறார்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
+
Advertisement


