விகேபுரம்,செப்.23: பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி விகேபுரம் நகர பாஜ இளைஞர் அணி சார்பில் கோட்டைவிளைப்பட்டி ராமர் கோயில் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து பரிசளிப்பு விழா விகேபுரம் நகர இளைஞர் அணி தலைவர் வில்லியம்பால் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராகப் நெல்லை வடக்கு மாவட்டத் தலைவர் முத்துபலவேசம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணிக்கு கோப்பை வழங்கி பேசினார். விழாவில் பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர் பால்மாரியப்பன், விகேபுரம் நகர பாஜ தலைவி சந்தனகுமாரி, நெல்லை மாவட்ட இளைஞர் அணி தலைவர் கந்தசாமி, மாவட்ட துணைத்தலைவர் கார்த்திக் சேது, மீனவ பிரிவு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமணராஜா, மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் கார்த்திக் சேது, சக்தி கேந்திர பொறுப்பாளர் இசக்கி முத்து, வீரபாண்டியன், ஒபிசி அணி மாவட்ட தலைவர் ராஜமணிகண்டன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் செல்லத்துரை பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement