கேடிசிநகர், நவ.22: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப் பர்னபாஸ் பதவியேற்று 5ம் ஆண்டு அபிஷேக தின விழா பாளை அண்ணாநகர் சிஎஸ்ஐ ஆலயத்தில் நேற்று காலை நடந்தது. கேரளா மாநிலம் கொச்சி திருமண்டல பேராயர் குரியன்பீட்டர் கலந்து கொண்டு அபிஷேக ஆராதனை நடத்தி தேவசெய்தி வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிறிஸ்தவ நல்லென்ன இயக்க நிறுவனரும், திருச்சி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டார். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியம் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலாசத்யானந்த், நெல்லை திருமண்டல முன்னாள் லே செயலாளர் வேதநாயகம், திருமண்டல பள்ளிகளின் மேலாளர் குருவானவர் சுதர்சன், கதிட்ரல் பேராலய தலைமை குருவானவர் பாஸ்கர் கனகராஜ், சாராள் தக்கர் கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், முதல்வர் பெல்சியா, தொழிலதிபர் ெஹமில்டன், சபை மன்ற தலைவர்கள் ஜெபராஜ், அருள்ராஜ் பிச்சமுத்து, துரைசிங், ஜெபரத்தினம், வில்சன் சாலமோன் ராஜ், முன்னாள் நிர்வாகிகள் புஷ்பராஜ், செல்வின் மணிமுத்து, கென்னடி, ஞானதாஸ், கரையிருப்பு ஜெயராஜ், கொங்கந்தான்பாறை தேவதாஸ், பொன்னு, சாப்டர் பள்ளி தலைமையாசிரியர் அருள்தாஸ், ஜான்ஸ் பள்ளி தலைமையாசிரியர் சாத்ராக், வக்கீல் ஜெனி, திருமண்டல வழக்கறிஞர் சாமுவேல் பாஸ்கர், சாராள்தக்கர் பள்ளி தலைமையாசிரியை நியூலின் கிரேஸ், கிறிஸ்தவ நல்லென்ன இயக்க மாநில துணைப் பொதுச்செயலாளர் மைக்கேல் ராஜேஸ் மற்றும் திருமண்டல குருவானவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பேராயர் மற்றும் அவரது துணைவியார் ஜாய் பர்னபாஸ் ஆகியோருக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்தனர்.
+
Advertisement


