புளியங்குடி,செப்.22: புளியங்குடி மனோ கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மையில் துறை பேராசிரியர் மாதவன், கல்லூரிகளின் இயக்குநர் வெளியப்பன் ஆகியோர் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பாராட்டினர். அப்போது அவர்கள் பேசுகையில் ‘‘விழாவில் பங்கேற்ற மாணவர்களில் 90% பேர் முதல் பட்டதாரிகள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இக்கல்லூரியை விரைவில் அரசு கல்லூரியாக மாற்ற உள்ளோம்’’என்றனர். நிகழ்வில் அன்னை மீனாட்சி கல்வியியல் கல்லூரி சேர்மன் முருகன் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.