கடையநல்லூர்,செப்.22: கடையநல்லூர் அருகே கம்பனேரி ஊராட்சி வலசையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு திமுக விவசாய அணி மாநில இணைச் செயலாளர் ஆனைகுளம் அப்துல் காதர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்வின் போது ஒன்றியச் செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர்கள் அப்பாஸ், பீரப்பா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், ஒன்றிய துணை அமைப்பாளர் முத்துக்குமார், நகர அமைப்பாளர் யாசின், ஆனைகுளம் கிளைச் செயலாளர் அரபாத், நல்லையா, மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.