சங்கரன்கோவில்,ஆக.21: சங்கரன்கோவிலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சென்னை கலைக்குழு இணைந்து தமிழ்நாடு முழுவதும் கலைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 16ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ள கலைப்பயணத்தில் ஒவ்வொரு நாளும் நான்கு மையங்களில் நாடகங்கள், இசைப்பாடல்களை கொண்டு நடனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலை பாடாபிள்ளையார் கோவில் அருகே விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
+
Advertisement