தென்காசி, செப். 19: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தென்காசி வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. தென்காசி சி.எம்.எஸ்.மெக் விற்றர் நடுநிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு வட்டார தலைவர் முகமது ரபீக் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் ரவி வரவேற்றார். செந்தில் விநாயகம் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்.கூட்டத்தில் 2ம் பருவ பாடநூல் புத்தகத்தை அந்தந்த பள்ளியிலேயே வழங்க வேண்டும். மாதந்தோறும் ஆசிரியர் குறை தீர்ப்பு நாளில் அலுவலரை சந்தித்து ஆசிரியர் பிரச்னைகளை தீர்ப்பது, டெட் தேர்வில் இருந்து ஆசிரியர் அச்சத்தை நீக்கி அரசாங்கம் விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குத்தாலிங்கம், அவுலியா, சங்கர குமாரசாமி, பேச்சியப்பன், ஜான் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement