புளியங்குடி, செப். 19: புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்வி குழுமத்தில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் முருகையா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கல்லூரி செயல் இயக்குநர் விக்னேஷ் வீராசாமி, பொறியாளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம், பொறியாளர்களின் செயல் திறன், தேசத்திற்கு அவர்களது பங்களிப்பு குறித்து விளக்கி கூறினார். பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, அந்தந்த துறை சார்ந்த கட்டுரைகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த படைப்புகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் இசக்கிமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை அனைத்து துறை தலைவர்கள் ஆசிரியர்கள், கல்லூரி மேலாளர் தங்கப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement