கோவில்பட்டி, நவ. 18: சிறுபான்மை பள்ளி பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவனிடம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிக்கப்பட்டது. கோவில்பட்டியில் அமைச்சர் கீதாஜீவனிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவில்பட்டி கல்வி மாவட்ட செயலாளர் புனித அந்தோணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவில்பட்டி கல்வி மாவட்ட சிறுபான்மை ஆர்.சி. தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு, மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் வழங்காததால் கடந்த 4 ஆண்டுகளாக ஊதியமின்றி வறுமையில் வாடுகின்றனர். எனவே அவர்களுக்கு பதவி உயர்வு ஒப்புதலும், ஊதியமும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


