அம்பை, அக்.17: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிப்பதற்கு 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கும் அருவியைப் பார்வையிடுவதற்கும் நேற்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
+
Advertisement