விகேபுரம்,அக்.17: விகேபுரம் நகர பாஜ இளைஞரணி சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் அவரது பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தலைமை வகித்தார். விகேபுரம் நகர இளைஞரணி தலைவர் வில்லியம்பால் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் முத்து பலவேசம், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் கந்தசாமி ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகரத் தலைவர் சந்தனகுமாரி, மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் கார்த்திக் சேது, ஓபிசி அணி மாநில செயலாளர் பால் மாரியப்பன், மாவட்ட ஓபிசி அணி செயலாளர் இசக்கிமுத்து, நகர பொதுச்செயலாளர் வைகுண்டமணி, நகரப் பொருளாளர் முத்துவரணன் மற்றும் பாஜ நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகர இளைஞரணி தலைவர் வில்லியம்பால் செய்திருந்தார்.
+
Advertisement