சுரண்டை, செப். 17: சுரண்டை அடுத்துள்ள சாம்பவர்வடகரை அருகில் உள்ள ஊர்மேலழகியான் சமத்துவபுரத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்துள்ளார். அப்போது கோயில் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அம்மனின் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க பொட்டு திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்கு ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எஸ்ஐ கார்த்திக் தலைமையில் விரைந்த வந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அதே ஊரைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜோசப் (23), கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலை சேர்ந்த காதர் மகன் நவபாஸ் (20) ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது.இது குறித்து வழக்கு பதிவு செய்த சாம்பவர்வடகரை போலீசார், ஜோசப் மற்றும் நவபாசை கைது செய்தனர்.
+
Advertisement