களக்காடு, அக். 16: களக்காடு அருகே மழைநீரை வெளியேற விடாமல் அடைத்ததால் ஆத்திரத்தில் தனியார் பேருந்து டிரைவரை அரிவாளால் வெட்டிய உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள கீழதேவநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (58). இவர், தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது சகோதரர் சந்தானம் தனது வீட்டை மறைத்து தகரத்தால் அடைத்து வைத்துள்ளார். இதிலிருந்து வடிந்த மழைநீர் நாகராஜ் வீட்டின் மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து தேங்கி நின்றது. இதனால் நாகராஜ் மழைநீரை அடைத்து வைத்தார். இந்நிலையில் நாகராஜ் தனது வீட்டு முன் நின்றிருந்த போது, அங்கு வந்த சந்தானத்தின் மகன் மாரியப்பன் தண்ணீரை எப்படி அடைத்து வைக்கலாம்? எனக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரியப்பன், நாகராஜை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார்.உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை தேடி வருகின்றனர்.
+
Advertisement