கடையநல்லூர்,செப்.16: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் ரூ.1.33 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கி வைத்தார். கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தார் சாலை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.2 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் கடந்த வாரம் முதற்கட்டமாக ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதையடுத்து 2ம் கட்டமாக ரூ.1.33 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவருமான மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம் முன்னிலையில் 30வது வார்டுகளுக்கு உட்பட்ட கடகாலீஸ்வரர் கோயில் அருகேயுள்ள தெருவில் நகர்மன்றதலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் துவக்கிவைத்தார். இதில் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், மாரி, சண்முகசுந்தரம், முத்துலட்சுமி சுடலைமுத்து, இளைஞர் அணி நகர துணை அமைப்பாளர் சுகுமார், மதன், முருகானந்தம், அப்சரா பாதுஷா, ஒப்பந்ததாரர் ரவிராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement