தென்காசி, ஆக.15: ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வக்கீல் சிவக்குமார் ஏற்பாட்டில்உடையாம்புளி பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களை திமுக சட்டத்துறை மாநில இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் கலை கதிரவன் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். நிகழ்வில் சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் ராஜா முகமது, செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் தங்கராஜ் பாண்டியன், பிச்சையா, தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் இசக்கி பாண்டியன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராமராஜ், முத்து சுப்பிரமணியன், பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில் அறங்காவலர் அழகப்பபுரம் கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் சிவக்குமார் செய்திருந்தார்.
+
Advertisement