செங்கோட்டை,அக்.14: இடைகால் அருகேயுள்ள துரைச்சாமிபுரம் தேவர் நகரில் சுடலைமாடசாமி கோவில் திருவிழா கடந்த 10ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடந்தது. விழாவின் நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதை தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் ஆபத்துக்காத்தான், அவரது மகன் தயா ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கிவைத்தனர். நிகழ்வில் ஊர் பொறுப்பாளர்கள் கருப்பையா, ஆஞ்சநேயர் இசக்கி, குத்தாலிங்கம், செங்கோட்டை நகர திமுக துணைச் செயலாளர் ஜோதிமணி, வேலுமணி, கலைஞர் தமிழ் சங்க நிர்வாகிகள் ஓம் சக்தி ஐயப்பன், காளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
+
Advertisement