விகேபுரம்,அக்,14: விகேபுரம் பகுதியில் 1 கிலோ கஞ்சாவை ஆட்டோவில் கடத்திய டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். விகேபுரம் குப்பை கிடங்கு அருகே வாகன சோதனை நடத்திய போலீசார், அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்தபோது ஆட்டோ டிரைவரும், பின்னால் அமர்ந்திருந்த நபரும் முன்னுக்கு பின் முரணாகப் பேசினர். இதனால் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து ஆட்டோவில் இருந்த பையை சோதனையிட்டபோது அதில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் டாணாவை சேர்ந்த அன்வர் அலி (46), ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த அசன் மைதீன் என்பதும், கஞ்சாவை விற்பதற்காக ஆட்டோவில் பதுக்கிவைத்து கடத்திச் செல்வதும் செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement