தென்காசி,ஆக.13: தென்காசியை அடுத்த கீழப்பாவூர் வேடுவர் தெரு அம்மாசி மகன் விஜயன் (35). இவர் தென்காசி நகராட்சியில் பேட்டரியில் இயங்கும் வாகனத்தை ஓட்டிச்சென்று குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மதியம் இவர் வேலையை முடித்துவிட்டு தென்காசி சம்பா தெருவில் உள்ள நகராட்சி செட்டில் பேட்டரி வாகனத்தை நிறுத்தி வைத்து சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அவருடன் வேலை செய்யும் முத்துக்குமார் என்பவர் வந்து பார்த்த போது விஜயன் பாட்டு கேட்கும் ப்ளூடூத் ஸ்பீக்கரை கையில் வைத்துக்கொண்டு கீழே கிடந்துள்ளார். சத்தம் கொடுத்து எழுப்பி பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. மின்சாரம் தாக்கி விஜயன் இறந்தாரா? அல்லது மாரடைப்பு காரணமாக இறந்தாரா? என தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement