செங்கோட்டை, அக்.12: செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி கிராமத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் இன்று (12ம்தேதி) முதல் 14ம்தேதி வரை காலை 10 முதல் மாலை 4 மணி வரை இஸ்ரோ நடத்தும் விண்வெளி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது. கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக டிஎஸ்பி தமிழ்இனியன், மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், இயற்பியல் பேராசிரியர் ஷேக் சலீம், ஆகியோர் பங்கேற்கின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு தேவையான எதிர்கால நோக்குடன் கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகள், விவசாய மேம்பாடுகள் குறித்து விஞ்ஞானி ஜோயஸ் ஜோஸ் சிறப்புரையாற்றுகிறார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் இம்மானுவேல் செய்து வருகிறார். நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கல்வியாளர்கள் என அனைவரும் பங்கேற்று பயன்பெறுமாறு பள்ளி நிர்வாகி டொமினிக் அழைப்பு விடுத்துள்ளார்.
+
Advertisement