சிவகிரி, செப். 12: வாசுதேவநல்லூர் அருகே வெறி நாய் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தது. ராமநாதபுரம் மங்கம்மா சாலையில் பெரியசாமி மகன் ஜெயக்குமார், தொழுவம் அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம்போல் 10ம் தேதி இரவு ஆடுகளை தொழுவத்தில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை தொழுவத்திற்கு வந்தபோது வெறிநாய் கடித்து 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர், இப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும் இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகள், இப்பகுதியிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன.
+
Advertisement