தியாகராஜ நகர், செப். 12: கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். தமிழாசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். மாவட்ட புகையிலை ஆலோசகர் மருத்துவர் சுப்புலட்சுமி, புகையிலையின் தீமைகள் குறித்தும், புகையிலையினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் எடுத்துரைத்தார். மாவட்ட சுகாதார கல்வியாளர் ஹரிஹரன், சமூக ஆர்வலர் டேவிட், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஆசிரியர் பிச்சையா, ஆசிரியைகள் முனீஸ்வரி, சாரதா மணி, முத்தரசி, விஜயபாரதி, கலைச்செல்வி, சுடர்விழி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார். இதில் மாணவ- மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.
+
Advertisement