சங்கரன்கோவில்,டிச.11: சங்கரன்கோவில் அருகே மேல திருவேட்டநல்லூரில் பல ஆண்டுகளாக தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இக்கிராமத்தில் அரசின் இடம் இல்லாததால் மக்கள் தாங்களகவே முன் வந்து ரேஷன் கடை அமைக்க இடம் வாங்கி கொடுத்தனர். இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியி ரூ.5 லட்சம் மற்றும் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.4.32 லட்சம் என மொத்தம் ரூ.9.32 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை வகித்தார்.
வாசுதேவநநல்லூர் எம்எல்ஏ சதன்திருமலைகுமார் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊர் நாட்டாண்மை மாடசாமி, திருவேட்டநல்லூர் கிளை செயலர் தர்மர், சந்திரன் விவசாய அமைப்பாளர் திருமலைச்சாமி, சின்னபாண்டி லட்சுமனன், செல்லத்துரை, சந்திரம், சுப்பையா, சுதாகர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ராதா,சுந்தரம், முத்துமணி, அறங்காவலர் பெருமாள், சுகாதார ஆய்வாளர் திருப்பதி, ஒன்றிய பிரதிநிதி முருகையா, மாடசாமி, மதிமுக கிளை செயலாளர் ராமர், பாம்பு கோயில் சந்தை திமுக கிளை செயலாளர் ஹைதர் அலி, காதர்ஒலி, முகைதீன் அப்துல்காதர், தேவசகாயம், மூசா, அப்பாஸ் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


