தென்காசி,டிச.11: நில அளவை துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் 15 நில அளவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நில அளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைதொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 15 நில அளவர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் கமல்கிஷோர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன் மற்றும் நில அளவை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


