நெல்லை, நவ.11: நாங்குநேரி அருகே ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியில் ஏற்கனவே திறந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு விவரம்: ஆழ்வாநேரி, புதுக்குறிச்சி, டாஸ்மாக் கடை அருகே 700 மீட்டர் தூரத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடம், குளம் உள்ளது. டாஸ்மாக் கடையால் பள்ளிக்கூடத்திற்கும், குளத்திற்கும் செல்ல மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அஞ்சுகின்றனர். குடிமகன்களின் தொந்தரவு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே ஆழ்வாநேரியில் திறந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

